மீனவர் பகுதியில் படம் எடுக்க வேண்டுமா? தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டு பாருங்கள்... தலை தெறிக்க ஓடுவார்கள். ஊர் கட்டுப்பாடு. தலைவரின் கட்டளை. எல்லாவற்றுக்கும் ராணுவம் போல் கீழ் படிவார்கள் அந்த பகுதி மக்கள். ஆனால் சில நேரங்களில் மட்டும்தான் இந்த கட்டுப்பாடு. சில நேரங்களில் அது செல்லாத காசாகிவிடுவதும் உண்டு.

 

அந்த பகுதி மக்களை அன்போடு அணுகினால் மட்டுமே தொடர்ந்து படம் எடுக்க முடியும். இது சாதாரண வையாபுரி படத்திற்கும் பொருந்தும். பலம் வாய்ந்த விஜய் படத்திற்கும் பொருந்தும். அப்படிதான் இவர்களை அன்பால் கட்டி போட்டிருக்கிறார் விஜய். சுறா படத்தில் இவருக்கு மீனவர் வேடம். கொச்சின் கடற்கரை துவங்கி பாண்டிச்சேரி கடற்கரை வரை தொடர்ந்து கரையோர கிராமங்களில் படம் பிடித்து வருகிறார்கள்.

 

அனுமந்தை என்ற மீனவர் கிராமத்தில் தற்போது படம் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சுமார் இரண்டாயிரம் மீனவ மக்களுக்கு தனது சார்பில் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் விஜய். அதுமட்டுமல்ல, இந்த விருந்தை தன் கையாலேயே பரிமாறவும் செய்திருக்கிறார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

 

இந்த பிரியாணி விருந்துக்கு காரணம்? வேறொன்றுமில்லை, விஜய்யை அடிக்கடி சாப்பிட அழைக்கிறார்களாம் அங்குள்ள வீடுகளுக்கு. நள்ளிரவு இரண்டு மணி வரை ஷ§ட்டிங் போவதால் தன்னால் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லையே என்று வருந்தினாராம் விஜய். அவர்கள் வீட்டுக்கு போவதை விட, தானே விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டால்? அதனால்தான் இந்த ஏற்பாடு.

எப்படியோ மனசும் வயிறும் நிறைஞ்சா சரி!



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

__._,_.___
.

__,_._,___

0 comments: