அறை சதம் அடிக்க போகும்
அழகிய தமிழ் மகனே
எல்லா புகழும் உனக்கே !!!
உன்னால் இந்த களத்தில் ஆட முடியாது என்றார்கள்
முடியும் என்று நிருபித்தாய் !!
அவர்களும் உன்னோடு சேர்ந்து ஆடுகிறார்கள் ...
உன்னால் எதிரிகளை சமாளிக்க முடியாது என்றார்கள்
முடியும் என்று நிருபித்தாய் !!
இப்பொழுது உன்னக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் ...
உன்னால் கூட்டம் சேர்க்க முடியாது என்றார்கள்
முடியும் என்று நிருபித்தாய் !!
தானாக சேர்ந்த அந்த கூட்டத்தில் அவர்களும் இருக்கிறார்கள் ....
உன்னால் அடிபட்டால் தாங்க முடியாது என்றார்கள்
முடியும் என்று நிருபித்தாய் !!
அவர்கள் அடிபடும் போது உன்னை நினைத்து கொள்கிறார்கள் ...
உன்னுடைய உறுதியை பார்த்தும் பார்க்காதது போல்
இன்னும் சில பேர் பல "முடியாது" போடுகிறார்கள்
உன் முன்னால்
தலைவா உழைத்திடு உயர்ந்திடு
என்ற உன் தாரக மந்திரம்
உன்னை தடுத்து நிறுத்த மட்டும் உதவாது
என்று அவர்களுக்கு நிருபித்து காட்ட
மற்றும் ��'ரு சந்தர்ப்பம் உனக்கு
இந்த ஆட்டத்திலும் இனி வரபோகும் ஆட்டத்திலும்
நீ வெற்றி பெற
உனக்கு எங்களின் வாழ்த்துக்கள் !!!
0 comments:
Post a Comment