" Your Not a Memebr Join us ! .? Please visit and join Click Here !
Iruvar Ullam


"நம்ம டாக்டர் பேஷன்ட்களோட மனசை நல்லா புரிஞ்சிக்கிட்டவர்னு எப்படிச்
சொல்றே..?" "ட்ரீட்மென்ட்டுக்கு வரும்போதே, நர்சுங்களோட ஆல்பத்தைக் கையில
கொடுத்து, விருப்பமான நர்ஸை செலக்ட் பண்ணிக்கச் சொல்றாரே!"

"எஸ்.எம்.எஸ்.ல புகார் கொடுத்தா ஆக்ஷன் எடுக்கறோம்னு சொன்னது தப்பாப்
போச்சா... ஏன்?" "கபாலி ஒழுங்கா மாமூலை செட்டில் பண்ண மாட்டேங்கறான்னு
நம்ம டிபார்ட்மென்ட்ல இருந்தே நிறைய புகார் வருது!"

"நடிகை ஜல்சாஸ்ரீ முத்தம் கொடுத்து ஓட்டு கேட்டு வர்றாங்களாமே..." "வேறு
எதைக் கொடுத்தாலும் தேர்தல் விதிமுறை மீறல்ன்னு வழக்கு போட்டுடுறாங்களே!"

"இந்த கல்யாணத்தை நடத்தறவங்க உஷார் பார்ட்டிங்கன்னு எப்படிச் சொல்றே?"
"மொய் எழுத பணம் கொண்டு வராதவங்களுக்கு கடன் கொடுக்க, சில
ஃபைனான்ஸ்காரங்களை ஏற்பாடு பண்ணி மண்டபத்துலயே உக்கார
வச்சிருக்காங்களே...!"

"என்னோட சட்டைப் பையிலேர்ந்து பணம் எடுத்தியா?" "ஆ.ராசா சத்தியமா நான்
எடுக்கலை டாடி!"

______________________________
_______________________________________________________________________________________________________________________________________________________________________________

"என் பையன் இப்போ கல்யாணத்துக்கு ரெடி!" "அப்படியா?!" "ஆமாம், கேட்டரிங்
படிப்பு முடிச்சுட்டு நல்லா சமைக்கக் கத்துக்கிட்டான்."

"ஆனாலும் நம்ம தலைவர் சிலையை இவ்வளவு கேவலமா செஞ்சிருக்க வேண்டாம்."
"ஏன்?" "லஞ்சம் வாங்கறதுக்காக கை நீட்டறாப்பிலே பண்ணியிருக்காங்களே."

"என்னங்க சட்டையெல்லாம் எண்ணெய்யா இருக்கு...?" "ஆபிஸில தலைவலின்னு
டைப்பிஸ்ட் என் மேல கொஞ்சம் சாய்ந்திருந்தாள்...!"

"அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே!
சமரசம் ஆயிட்டாங்களா?" "நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு
ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"

"என் வீட்டுக்காரரு ஐபிஎல் 20-20 மேட்ச் பார்த்ததிலேர்ந்து பெட்டிக்கடை
வியாபாரத்தைக் கூட ஒழுங்காச் செய்ய மாட்டேங்கிறாரு." "அவ்வளவு கிரிக்கெட்
பைத்தியமா?" "தினமும் 12 மணி நேரம் வேலை பாத்துக்கிட்டு இருந்தவரு, இப்ப
2 மணி நேரத்திலேயே வீட்டுக்கு வந்துடறாரு."

_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

"பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு
அதிர்ச்சியாப் போச்சு!" "வரதட்சணை நிறைய கேட்டாரா?" "இல்லைங்க... வெங்காய
பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!"

"இந்தப் பதிப்பகத்துல மட்டும் கூட்டம் அலைமோதுதே, என்ன விஷயம்?"
"வெங்காயம் இல்லாத சமையல்ங்கிற தலைப்புல நிறைய புத்தகங்கள்
வெளியிட்டுருக்காங்களாம்!"

"போலீஸ் வந்துருக்கு. ஏன் அவரும் ஸ்பெக்ட்ரம்ல சம்பந்தப்பட்டிருக்காரா?"
"நீங்க வேற! அவரு வீட்டுல தினமும் வெங்காய சாம்பார் பண்ணுறாராம்."

"பி.ஜே.பி. பொதுக் கூட்டத்துக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கே...."
"போஸ்டர்ல 'வெங்காய நாயுடு பேசுகிறார்'னு போட்டுட்டாங்களாம்!"

"நமது ராஜா ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாரே ஏன்?" "ராசாவா....
பிறக்கவில்லையே என்கிற வருத்தம்தான்!"


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN


 

__._,_.___
Recent Activity:
Hi Friends,

Ungalaukum ithu pola mail pannanum asaiya iruka, appo kizha irukara link click pannuga, Join pannuga.. :D

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/
http://iruvarullam.blogspot.com/

Appram enna, Forward pannuga, Santhosa paduravanga santhosa padatum, thituravanga thitatum. Group la ithu yellam satharanam pa!! :P

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/join
http://iruvarullam.blogspot.com/

Thanks and Regards,
Iruvar Ullam - Iru Ullathin Thevaigal:)
.

__,_._,___

0 comments: