முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நடித்த வம்சம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இவ்விழாவிற்கு முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.அழகிரி, நடிகர் விஜய், நடிகர் சூர்யா உட்பட பலர் வந்து சிறப்பு செய்தனர்.
முதல்வர் கருணாநிதிக்கு இருபுறமும் விஜய், சூர்யா உட்கார்ந்திருந்தனர்.
நான் ஏதும் சொல்லிவிடுவேனோ என்று போட்டுக் காட்டவில்லையோ என்னவோ.
வம்சம் என்று படத்திற்கு டைட்டில் வைத்தால் நம் வம்சத்தை குறிப்பிடுவது மாதிரி இருக்கும். அதனால் படத்தின்டைட்டிலை மாற்றுங்கள் என்று கூறினேன்.
ஆனால் படத்தின் டைரக்டர் பாண்டிராஜ், டைட்டிலை மாற்றினால் கதையே சிதைந்துவிடும் என்று பிடிவாதமாக இருந்துவிட்டார்.
நல்ல வம்சாவழியில் வந்தவர் சூர்யா. அதே மாதிரி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய்யும் வம்சாவழியில் வந்தவர்தான்.
இந்த இரண்டு வம்சமும் என் பக்கத்தில் இருக்கிறார்கள். புகழின் உச்சியில் இருக்கிறார்கள். அதேபோல் பேரனின் வம்சமும் புகழப்படும்'' என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment