Friends, forward this email to all illayathalapathy fans and most importantly to the bashers who are trying to tarnish our thalaivar's image...Our vijay has a heart made of gold and he is not just a super hero in the big screen but also in his real life...three cheers to Illayathalapathy... Na, unga nalla manasu yaarukum varadhu na..agaram foundations nu aarambichi oora emathura pasangaloda true colors idhu dhan... அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுத்த நடிகர்! தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று உதவும் நட்சத்திரங்கள் இருக்கும் அதே திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி அல்வா கொடுப்பதில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சூர்ய நடிகர். நேருக்கு நேரான படத்தில் அறிமுகமானாலும் அவரை முதலில் நாயகன் ஆக்கியவர் சிவமான சக்தி தயாரிப்பாளர்தான். இளம் இயக்குனர்களின் கலங்கரைவிளக்காக திகழ்ந்து வந்த அந்த தயாரிப்பாளர் காதல்கோட்டை, காதலே நிம்மதி, கனவே கலையாதே என நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பின்னொரு காலகட்டத்தில் கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி, இப்போது புதுப்படம் ஒன்றிற்காக சூர்ய நடிகரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதோ... அதோ.. என்று ஜகா வாங்கிய அந்த நடிகர் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டாராம். தான் அறிமுகப்படுத்திய நடிகர் தனக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்த தயாரிப்பாளர் விரக்தியில் இருக்கிறார். இவர் இப்படியென்றால், அந்நிய நடிகர் அதற்கு மேல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை கொள்கை முடிவாகவே வைத்திருக்கும் அவர் சினிமாத்துறையின் நடிகராக அறிமுகம் ஆகும்போது புதுமுகம் என்பதை மறந்து விட்டாரோ என்னவோ. அதேநேரம் விஜய நடிகர் இந்த விஷயத்தில் ரொம்பவே நல்லவர் என்று போற்றுகிறது கோடம்பாக்கம். காதலுக்கு மரியாதை கொடுத்த படத்தை தயாரித்த சங்கிலி, கஷ்டமான காலகட்டத்தில் விஜய நடிகரிடம் கால்ஷீட் கேட்க, அவருக்கு உதவும் விதமாக கால்ஷீட் கொடுத்து படத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துக் கொடுத்தார். சுறாவான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லையென்றாலும் படத்தை முதலில் தயாரித்த சங்கிலி தயாரிப்பின் கையை கடிக்கவில்லை. அவருக்கு லாபத்தை கொடுத்த படமாகத்தான் அந்த படம் இருந்தது. அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு அல்வா கொடுக்கும் நடிகர்களை குறிப்பிட்டு ஒரு சினிமா விழாவில் சங்கிலி தயாரிப்பாளர் பேசிய பேச்சு இந்த செய்திக்கு பொருத்தமாக இருக்கும் : ``ஒரு பட விழா நடைபெறும்போது, அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வதில்லை. கேட்டால், டெல்லியில் இருக்கிறேன்...மும்பையில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள். ஒரு படத்தை தயாரித்து, அதை திரைக்கு கொண்டுவருவதற்குள் தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உதவி செய்யவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும். ஒரு படம் வெற்றிபெற்றால், அந்த வெற்றியில் படத்தில் பணிபுரிந்த அத்தனை பேரும் பங்கு போடுகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால், அந்த பாதிப்பை தயாரிப்பாளர் மட்டுமே சுமக்கிறார். வெற்றியை பங்குபோடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தார் அந்த தயாரிப்பாளர். |
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment