Vijay's speech in 'Makkal Iyakkam' meeting


ENGLISH Transalation : 
It is known that everyone had wished to replace 'Puratchithalaivi' Jayalalitha in where the DMK led an intra-family political rule with their own family members. I thank you all for giving respect to my word, and delivering a great victory for the AIADMK, even though many of you were in different political parties. Im very happy that we all had proven together, who we are by reforming as one team. I was so proud when many candidates from the AIADMK contacted me and said that they were so happy with the hard work by my fans.

"Change is a man's philosophy", As poet Kannathaasan quoted, our social welfare societies have been reformed as a foundation. Our foundation has organized many welfare activities in the past few years like, organizing fan-fast to give voice for the innocent Srilankan tamils and building many computer workstations around the state. I request everyone that, we all must continue our welfare activities further with the support of Jayalalitha and we must lead a blessed bright life.


TAMIL :
தவறு செய்த குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காக, நமது இயக்கம்.ஆ.தி.மு.க.தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு ஆரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளையெல்லாம் தூக்கி ஏறிந்துவிட்டு, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அம்மாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஒரு அணியாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி ஆடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது கடுமையான உழைப்பைப் பாராட்டியபோது எனக்குப் பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது.

இலங்கைத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ மாணவிகளுக்குகம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது. இனி மேலும் சமூக நலப்பணியைத் தொடர்ந்து செய்து, மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கரத்தை வலுப்படுத்தி, அவர்களின் ஆசியோடு உங்களின்
எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில்!










__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: