இன்று திரையுலகில் நிலவும் கேள்விகளில் ஒன்று விஜய் நடிக்கும் அடுத்த படம் என்ன என்பதாகும்.விஜய் தற்பொழுது வேலாயுதம் படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் உள்ளார்.விரைவில் இப்படத்திற்கு பூசணிக்காய் உடைத்து நிறைவு விழா செய்ய உள்ளனர்.விஜயின் அடுத்த படமான நண்பனும் மிக வேகமாக சங்கரின் முன்னைய படங்களைப்போல் அல்லாமல் நகர்கிறது.அடுத்து விஜய் நடிக்கும் படம் எது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விஜய் வேலாயுதம் படம் முடிவடைந்தவுடன் நடிக்க இருந்த படம் சீமான் இயக்கத்தில் பகலவன் ஆகும்.சீமான் சொன்ன கதைபிடித்தவுடன் திரைக்கதை அமைத்து கொண்டுவரும்படி விஜய் சொல்லி அதன் படி திரைக்கதை அமைத்து படத்தை விரைவில் தொடங்கும் நிலையில் உள்ளார் சீமான்.இது மிகவிரைவில் முடிவடையும் படமாக உள்ளது.விஜயை மாறுபட்ட கோணத்தில் காட்ட உள்ளார் சீமான்.இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.இவரும் படத்தை பற்றி உத்தியோக பூர்வமாக கூறியுள்ளார் விஜயும் விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.ஆனால் இப்படத்தின் தொடக்கம் விஜயின் வரவுக்காக காத்திருக்கிறது.விஜய் நாளைக்கு தொடங்குவோம் என்றால் உடனே ஆரம்பமாகும் நிலையில் உள்ளது.
அடுத்த படம் மணிரத்தினத்தின் படம் .மணிரத்தினத்தின் பொன்னியின்செல்வன் கைவிடப்பட்டது எனக்கூறப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை சிறிது காலத்தின் பின் தொடங்க உள்ளார் என நேற்று மணிரத்தினத்தின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகியது.ஆனால் விஜயை வைத்து பொன்னியின் செல்வனுக்கு பதிலாக புதிய ஒரு படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.இப்படம் எப்பொழுது தொடங்கும் எனத்தெரியவில்லை.
அடுத்த படம் அமீரின் கனவுப்படமான கண்ணபிரான்.அமீர் விஜயை சந்தித்து பேசி சம்மதம் வாங்கிவிட்டார். தனது தற்போதைய படமான ஆதிபகவானை முடித்து விட்டு கண்ணபிரானை தொடங்க உள்ளாராம்.இதில் யார் கதாநாயகி தயாரிப்பாளர் என்பன தேர்வு நடக்கிறது .இப்படத்துக்கு இசை யுவன்சங்கர்ராஜா என உறுதிப்படுத்திவிட்டார் அமீர்.
இவ்வாறு இயக்குனர்கள் வரிசையில் நிற்க அடுத்த படம் எது என விஜய் தனது பிறந்த நாளன்று அறிவிக்க உள்ளார். அனைவரும் எதிர்பார்பது மணிரத்தினம்.ஆனால் பகலவன் முந்தும் என விஜய்க்கு நெருங்கிய வட்டாரம் இன்று தெரிவித்துள்ளது.இப்படம் பற்றிய உத்தியோக அறிவிப்பை விஜய் தனது பிறந்த நாளன்று வெளியிட உள்ளராம்.

 

$VijayDinesh$

 

-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen

 

     ThalaPathY AaGatuM<-

 

 

 

 


 

 



 



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: