வேலாயுதம் படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படம் மிக விறுவிறுப்புன் சிறப்பாக வந்திருப்பதாகவும் அதற்கு ராஜாவின் அபார உழைப்புதான் காரணம் என்றும் அவர் கூறினார்.
ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் இந்தப் படத்தின் ரஷ் பார்த்துள்ளார் விஜய். படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பிச் சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம்.
என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என டென்ஷனாக இருந்தாராம் ராஜா. அப்போது ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் போனில் அழைத்துள்ளார். "படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் மோகன்.
இதுகுறித்து ராஜா கூறுகையில், "விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்தப் படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும்," என்றார்.
0 comments:
Post a Comment