கோடாம்பாக்கத்தில் பணப்பையோடு அலையும் ஒரு தயாரிப்பாளருக்கு விஜயின் கால்ஷீட் கிடைத்து விட்டால் அவருக்கு லாட்டரி சீட் அடித்த மாதிரிதான் என்கிறார்கள் ஃபாக்ஸ் ஆபீஸ் இடைநிலைத் தரகர்கள். காரணம் விஜயின் படம் தோல்வி அடைந்தாலுமே கூட செகண்ட் ரிலீஸ் எனப்படும் இரண்டாம் கட்ட வெளியீட்டில் விஜயின் பழைய படங்கள் இப்போது இரண்டு வாரம் ஓடி பணம் சம்பாதித்து விடுவதுதான் என்கிறார்கள். இரண்டாம் கட்ட வெளியீட்டில் இன்று எம்.ஜியார், ரஜினி படங்களை வெள்ளிகிழமை போட்டால் அடுத்து வரும் வியாழன்வரை ஒருவாரம் குறையாமல் வசூல் எடுக்கலாம்.
இப்பொது மூன்றாவதாக விஜய் படங்களுக்கு மட்டும்தான் இந்த மவுசாம். தவிர திருட்டு வீசிடி சந்தையில் ரஜினியை விடவும் விஜய்க்குத்தான் பிஸ்னஸ் என்கிறார்கள் பர்மா பஜார் பைரேட்டர்கள். படுதோல்வி அடைந்த சுறா, தமிழ்நாடு, பாண்டிச்செரி, ஏனாம், மங்களூர், மும்பை ஆகிய பைரசி சந்தையில் 4 கோடி கொட்டி கொடுத்திருக்கிறது என்று ரேண்டம் சர்வே எடுத்திருகிறார்கள் சென்னை லயோலா கல்லூரியின் புள்ளியியல் துறை மாணவர்கள். அந்த அளவுக்கு விஜய் மார்கெட் வலிமையாக மாறிருக்கும் இருக்கும் நிலையில், அந்த மார்கேட்டை நல்லமுறையில் தக்கவைத்துகொள்ள, கதையை நேசிக்கும் தனது பழைய தயாரிப்பாளர்களை டிக் அடிக்க ஆரம்பித்து விட்டார் விஜய். இந்த வரிசையில் வேலாயுதம் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரனுக்கு கொடுத்திருகிறார். இந்த படத்துகுப் பிறகு கலைப்புலி எஸ். தாணுவுக்கு, முன்றாவதாக ஆர்.பி.சௌத்ரிக்கு. சூப்பர் குட் ஃபிலிம்ஸ்- விஜய் கூட்டணி என்றால் அது கட்டாயம் வெற்றி என்பது கடந்தகால டிராக் ரெக்காட்.
விஜய்க்கு முதன் முதலாக பிரேக் கொடுத்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி என்று இந்தக் கூட்டணியில் தாயாராண வெற்றிப்படங்களை ஒரு பட்டியலே போடலாம். தனது கேரியர் கிராஃபில் சறுக்கல்களைச் சந்தித்து வரும் விஜய், நமக்காக நல்ல கதையையும் இயக்குனரையும் கொண்டுவருவார் என்று நம்பியே மீண்டும் சௌத்ரியுடன் கைகோர்க்கிறார் என்கிறார்கள்.
இதற்கான தொடக்கக் கட்டப் பேச்சுக்கள் முடிவடைந்து விட்டன என்று இரு தரப்புக்கும் நெருங்கிய வட்டாரங்கள் சொல்லும் நிலையில், சௌத்ரி தயாரிக்கும் படத்துக்கான இயக்குனர், ஸ்கிரிப்ட் போன்றவற்றை முடிவு செய்யும் முழுபொறுப்பையும் அப்பா எஸ்.ஏ.சியிடமிருந்து வாங்கி சௌத்ரியிடமே கொடுத்திருக்கிறார் விஜய் என்கிறது தயாரிப்பாளர் வட்டாரம்.
விஜய் விழித்துகொண்டு விட்டார்… இனி பட்டைய கெளப்புங்க தளபதி
0 comments:
Post a Comment