வேலாயுதம் படத்தில் படத்தில் நடிப்பது குறித்து சரண்யா கூறியதாவது : விஜய் படம் என்பதால்தான் நான் அவருடைய தங்கச்சி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். வெண்ணிலா கபடி குழு படத்துக்குப் பின் தெலுங்கில் நிறைய படங்கள் நடித்தேன். ஆனால் அங்கு தங்கச்சியாக நான் நடித்ததே இல்லை. ஹீரோயினாக ம்ட்டுமே நடித்தேன். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் என்னை தங்கச்சியாகவே பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு எப்போதுமே கடமைப்பட்டு இருக்கிறேன். எப்போதுமே தமிழ் ரசிகர்களை மறக்க மாட்டேன். இப்போது விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் நான் அவருடைய தங்கையாக நடிக்கிறேன். இந்த கேரக்டரை எனக்காகவே உருவாக்கினார்களாம். விஜய்க்காகவே இந்த தங்கை வேடத்தை ஏற்றுக் கொண்டேன். பாசமலர் படத்தில் வருவது போன்ற அண்ணன் தங்கை வேடம் இது. அந்த அளவுக்கு நானும், விஜய்யும் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழியும் காட்சிகள் உண்டு. கேட்கவே நெகிழ்ச்சியாக இருந்தது. அதனால்தான் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். தமிழ் சினிமா என்னிடம் எதிர்பார்ப்பதைக் கொடுக்கிறேன். வேலாயுதத்தில் என் கேரக்டர் பிடித்திருந்தது என்றார் சரண்யா மோகன். Yours VIJAYveriyan- |
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment