3 இடியட்ஸ்... சிம்பு சம்மதம்!

சென்னை, ஜூலை 31,2010

நீண்ட யோசனைக்குப் பிறகு '3 இடியட்ஸ் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார், நடிகர் சிம்பு.

தனக்கு அஜீத் ரசிகர்கள் நிறைய இருப்பதால் 3 இடியட்ஸ் படத்தில் விஜய் உடன் நடிக்க யோசிப்பதாக கூறியிருந்த சிம்பு, நல்ல வாய்ப்பை தவிர்க்கக் கூடாது என்ற முடிவால் ஒப்புக்கொண்டுள்ளார்.

விஜய் உடன் நடிப்பதால், அஜீத் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி வராது என சிம்புவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

3 இடியட்ஸின் ஏனைய அப்டேட்ஸ்...

* ஷங்கருடன் இணைந்து 'முதல்வன்' படத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய விஜய், '3 இடியட்ஸ்' மூலம் அவருடன் சேர்கிறார். இந்தியில் அமீர்கானின் லீட் ரோலை தமிழிலில் செய்கிறார் விஜய் என உறுதி செய்யப்பட்டது.

*  இந்தியில் தாம் நடித்த கதாப்பாத்திரத்தையே தமிழிலும் மாதவன் செய்வார் என பேசப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. தமிழ் 3 இடியட்ஸ்சில் தாம் நடிக்கவில்லை என்பதை தனது டிவிட்டரில் ரசிகர்கள் வருந்தாத வகையில் தெரிவித்திருக்கிறார், மாதவன்.

* இந்தியில் போமன் இரானியின் பிரின்ஸிபல் கதாபாத்திரத்தை யார் செய்வார் என எதிர்பார்ப்போடு காத்திருந்தபோது, எவ்வித யோசனையும் இன்றி, சத்யராஜை தேர்வு செய்தார் ஷங்கர்.

* ஷங்கர் படம் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், அவர் தேர்வு செய்துருப்பது 'அன்னியன்' இணை ஹாரிஸ் ஜெயராஜை!

* இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே உடன் இருப்பவர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஆனால், '3 இடியட்ஸுக்கு டிக் செய்திருப்பது, 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ஈரம்' மூலம் வெகுவாக கவரப்பட்ட மனோஜ் பிரேமஹம்சா.

* மாதவன் கதாப்பாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வியை விட, கரீனா கபூர் ரோலில் யார் வலம்வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பே எகிறியிருக்கிறது. இப்போதைக்கு இலியானா, த்ரிஷா ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.

* '3 இடியட்ஸ்' வேலைகளை மும்முரமாக இயங்குவதற்கு, 'எந்திரன்' ரிலீஸுக்காக காத்திருக்கிறது, ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம்.

ஆக... 3 இடியட்ஸ் படத்துக்கு இதுவரை ஷங்கர், விஜய், சிம்பு, சத்யராஜ், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மனோஜ் பிரேமஹம்சா ஆகியோர் மட்டுமே உறுதியாகியுள்ளனர்.



 

Yours

VIJAYveriyan--->

 


 

 



 




__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: