முன்பொரு முறை பிரஸ்மீட் ஒன்றில் டைரக்டர் தரணி சொன்ன வார்த்தைகள் இது. விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும்போது அவரது முகத்தையே பார்த்துக் Vijayகொண்டிருப்பேன். விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம். தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும்.

அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர். சிங்கம் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம்தான் சொன்னார் ஹரி. காக்க காக்க கதையை கூட முதலில் இவரிடம்தான் சொன்னார் கவுதம். கஜினி மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம்தான். அயன் கதையின் நாயகனாக கேவிஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரேதான். இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம். விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: