'வேட்டைக்காரன்' படத்தை விஜய்க்கே காமிக்கலையாமே? கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்த இந்த கேள்விக்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது. அதுவும் நல்ல ரிசல்ட்! கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டுகளித்தார் விஜய். இந்த நண்பர்கள் வட்டாரத்தில் டைரக்டர் பேரரசும் இருந்தாராம். (அடுத்த ஆட்டத்துக்கு ஆள் தயார் பண்றாராக்கும்)
வெளியே வந்த அத்தனை பேர் முகத்திலும் பரவசம். கடந்த சில படங்களாக தோல்வி முகத்தில் இருந்த விஜய், சற்று பதற்றமாகவேதான் இந்த படத்தை பார்த்ததாக முணுமுணுக்கிறார்கள். வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய். அதற்காக பார்த்து பார்த்து உழைத்த படம்தான் வேட்டைக்காரன். எல்லா சுமையையும் ஒரு நொடியில் இறக்கி வைத்ததாக கருதுகிறாராம் இப்போது.
இதற்கிடையில் இன்னொரு கசமுசா. வேட்டைக்காரன் படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று சிங்கள பாடல் ஒன்றின் மெட்டில் அமைந்திருக்கிறதாம். ராஜ் வீரரத்னே என்ற சிங்களரின் மெட்டு இது. இவர் விஜய் ஆன்ட்டனியின் நண்பர் என்பதால் உரிமையோடு சுட்டாராம். ஆனால் அதுவே இவரை சுடும் போலிருக்கிறது.
வேட்டைக்காரன் படத்தை புறக்கணிக்கும்படி குமுறல் சத்தம் கேட்கிறது உலக தமிழர்கள் மத்தியில். விஜய் ஆன்ட்டனியை விட்டு விட்டு தன்னை நெருக்கும் இந்த சோதனையை சற்று கவலையோடு கவனிக்கிறது விஜய் வட்டாரம்.
உப்பு தின்றது ஒருத்தர். தண்ணி குடிக்கிறது இன்னொருத்தரா?
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
0 comments:
Post a Comment