__,_._,___
காவலனால் ஆட்டம் காணும் ஆடுகளம் எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய படம் தனுஷ் நடித்திருக்கும் ஆடுகளம்.வருகிற பொங்கலன்று அந்தப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் இப்போதே அந்தப்படம் பொங்கலன்று வராது என்று சொல்கிறார்கள்.அதற்குக் காரணம்?இருக்கிறதாம். பொங்கலுக்கு முதல்வர் கதைவசனம் எழுதியிருக்கும் இளைஞன் படமும்... வெளியாகவிருக்கிறது. அதோடு கார்த்தி நடித்திருக்கும் சிறுத்தை படமும் வெளியாகவிருக்கிறது. இவை எல்லாம் பரவாயில்லை இவை இரண்டோடும் இளையதளபதி விஜய் நடித்திருக்கும் காவலன் படமும் வெளியாகிறது. இதனால் பா.விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இளைஞன் படம் வெளியானால் அது திருவிழாவில் காணாமல் போன குழந்தை போலாகிவிடும் என்று ஒரு கருத்து முதல்வரிடம் சொல்லப்பட்டதாகவும் அதன்காரணமாக முதல்வரே நேரடியாகப் பேசி ஆடுகளம் படவெளியீட்டைத் தள்ளிவைக்கக் கேட்டுக் கொண்டதாகவும் அதனாலேயே சன்பிக்சர்ஸ் படவெளியீடு தள்ளிப் போவதாகச் சொல்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் விஜயின் படம்தான். ஏனெனில் விஜயின் ஓபனிங் மாஸ் பற்றி உலகுக்கே தெரியும் இதனால் இளைஞன் படம் அமுங்கி விடும் என்பதால் போட்டியை குறைக்கதான் இந்த ஏற்பாடு எல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரம் என்பதால் சன் பிச்சர்ஸ் சம்மதம் தெருவித்துள்ளது என்பதுதான் இப்போதைய செய்தி பொங்கல் ரேசில் வெல்வது காவலன் என்பது வெளிப்படை உண்மை!!! ->VijayDinesh<- *KaaValaN Of ThalaPathY FaMe* |
tublog.blogspot.com | Design by JustSkins | Converted by Blog and Web
0 comments:
Post a Comment