__,_._,___
| விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது. கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடை...ப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார். இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன. இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார்.மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு 'உண்மை'யான காரணம் "நிச்சய வெற்றி என்ற திரை படம் தான் காவலன்" மீண்டும் ஒரு காதலுக்கு மரியாதை என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் விஜய் வளர்ச்சி பிடிக்காத விஜயின் விரோதிகள் காவலனை தடுக்க முயற்சி செய்கின்றனர். "விண்ணை காப்பான் ஒருவன் மண்ணை காப்பான் ஒருவன் உங்களை எப்போதும் காப்பார்கள் உங்களது ரசிகர்கள் கவலை வேண்டாம் விஜய்" உங்களது அணைத்து படம்களை விட மிக பெரிய ஒபெநிங் பெற போகிறது காவலன். பொங்கல் அன்று ஒவ்வரு ரசிகனும் சொல்லும் ஒரே சொல் "காவலன் மிக பெரிய வெற்றி" ->VijayDinesh<- *KaaValaN Of ThalaPathY FaMe* |
tublog.blogspot.com | Design by JustSkins | Converted by Blog and Web
0 comments:
Post a Comment