'த்ரீ இடியட்ஸ்'ஸில் அமீர்கானும், மாதவனும் இணைந்து நடித்திருந்தார்கள்.'நண்பன்'னில் மாதவனுக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இன்னொரு நண்பனாக ஜீவா. கதாநாயகியான இலியானாவின் தந்தையாக பேராசிரியர் வேடத்தில் சத்யராஜ் வருகிறார். கோவையில் நடைபெற்ற 'நண்பன்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றோம்.உள்ளே பிரதமர் இருக்கிறாரோ என்ற அளவில் ஏக கெடுபிடி. சஃபாரி அணிந்த செக்யூரிட்டிகள் வாசலிலே தடுத்து நிறுத்துகிறார்கள்.இருந்தாலும் குமுதம் வாசகர்களுக்காக ஒரு எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட். காட்சி இதுதான்: ஜீவாவும் ஸ்ரீகாந்தும் ஒரு காரில் வந்து திருமணக் கோலத்திலிருக்கும் இலியானாவைக் கடத்த வேண்டும்.ஷங்கர் பரபரப்பாய் படமாக்கிக் கொண்டிருந் தார். மூன்று நண்பர்களில் விஜய் திடீரென்று மாயமாகிப் போக அவரைப் பற்றி தகவல் அறிந்துகொள்ள விஜய்யின் காதலியான இலியானாவைத் தேடி ஜீவாவும், ஸ்ரீகாந்தும் வர, அங்கு திடீர் திருப்பமாக இலியானாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

வடஇந்திய முறைப்படியான திருமணத்திற்கு பிரமாண்ட வெள்ளை துணிப் பந்தல் போடப்பட்டு ஏகப்பட்ட மார்வாடிகளை அழைத்து வந்து உட்கார வைத்திருந்தார்கள்.


மணப்பெண்ணை கடத்துவதற்காக முகத்தில் மல்லிகைப் பூக்களால் மறைத்துக்கொண்ட தலைப்பாகை அணிந்தபடி ஜீவா, மாப்பிள்ளையாக மேடையில் அமர்ந்து இலியானா காதில் ஏதோ ரகசியம் சொல்ல, ஜீவா சொன்னதைக் கேட்டு இலியானா திடுக்கிட்டுப் போகிறார்.இது முதல் ஷாட்.ஷங்கர் ஏன் இத்தனை பெரிய இயக்குநராய் இ ருக்கிறார் என்பதற்கு அந்தக் காட்சியை படமாக்கிய விதத்தில் தெரிந்தது. அத்தனை சிரத்தை. ஒவ்வொருவர் முகபாவம், அசைவுகள் என மிக நுணுக்கமாய் பார்க்கிறார்.

அடுத்த காட்சி,ஜீவா மீது சந்தேகம்கொள்ளும் சத்யராஜ் அவரது மல்லிகை அலங்காரத்தை விலக்கி முகத்தைப் பார்ப்பது, உடனே ஜீவா, இலியானாவை இழுத்துக்கொண்டு காருக்கு ஓடுவது.

காரை ஸ்ரீகாந்த் ஓட்டுவதாக காட்சி எடுத்துக்கொண்டிருந்தபோது வேக வேகமாய் வந்த ஜீவா காரின் மீது மோதி நிஜமாகவே கீழே விழ, 'கட்' என்று கேமரா நிறுத்தப்பட்டது.வலியை மறைத்தபடி 'ஒன்றுமில்லை சார்'என்று ஷங்கரிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஓடி வந்து காரில் பரபரப்பாக ஏறிக்கொண்டார். தொழில் பக்தி.

 

அழகுப் பதுமையான இலியானாவிடம் ஜீவா காதில் ரகசியம் சொல்லும்போது இலியானா முகத்தைப் பார்த்து ஜீவா சிரித்துவிட. பிறகு மீண்டும் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. அப்படி என்ன ரகசியம் சொன்னாரோ ஜீவா. விஜய்யின் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட-வில்லை. அவர் தொடர்பான காட்சிகள், கோவை, பொள்ளாச்சி, ஊட்டி பகுதிகளில் எடுக்கப்பட இருப்பதாக யூனிட் ஆட்கள் பேசிக்கொண்டார்கள்.சில பிரச்னைகளுக்குப் பிறகு விஜய் மீண்டும் நண்பனில் ஹீரோவாகியிருப்பதில் யூனிட் ஆட்களுக்கு மகிழ்ச்சி.

இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் யாரும் படத்தைப் பற்றி பேசக்கூடாது என்று உத்தரவாம். எல்லோரும் கப்சிப். தன் படம்தான் பேசவேண்டும் என்று நினைப்பவராயிற்றே ஷங்கர்

$VijayDinesh$

 

-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen

 

     ThalaPathY AaGatuM<-

 

 

 

 


 

 



 




__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: