PASS THIS TO EVERYONE YOU  KNOW
290+ Members Already Joined
JOIN IRUVAR ULLAM GROUP TO RECEIVE COOL & IRUVAR ULLAM MAILS



If you can't see the pictures, right click and choose "show picture" you may have to repeat this several times.

  Todays Email  [20.04.2011]  

Line



ஜோக்ஸ் மாதிரி.. (சிரிப்பு வரலைனா நா பொறுப்பில்ல..)





இது ஒரு உப்புமா பதிவு.. பதிவெழுத நேரமில்லாதனால (வெட்டியா இருந்தாலும் நாங்க ரொம்ப பிசினு சீன் போடுவோம்ல) எங்கயோ கேள்விப்பட்ட ஜோக்ஸ பகிர்ந்துக்குறேன்.

(எங்க பக்கத்து வீட்டு பாட்டி மேல சத்தியமா இத யாரு எழுதுனதுனு தெரியாதுங்க. இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியதுஇந்திரா"னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. சொல்லிபுட்டேன்.)

********************************

பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கறான்னு பேப்பரை நிறுத்துனது தப்பாப் போச்சு..

ஏன்?

இப்ப நியூஸ் கேட்டுட்டுத் தரேன்னு டிவிஐ ஓசி கேக்குறான்.

********************************

உங்க வீட்ல சமையல்காரனா வேலை செய்ய நா ஒத்துக்குறேன். ஆனா ஒரு கண்டிசன்.

என்ன கண்டிசன்? தயங்காம சொல்லு.

என்னையும் இங்கயே சாப்பிடுனு வற்புறுத்தக் கூடாது.

********************************

நண்பர் : உங்க மனைவி, யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?

கணவன் : நா யாருக்கு ஓட்டுப் போடுவேனோ.. அவருக்குத்தான்.

நண்பர் : நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?

கணவன் அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யலையே..

********************************

அம்மா : ரமேஷ், அப்பாவை கூப்பிடு.

ரமேஷ் : அப்பா அப்பா இங்க வா..

அம்மா : அப்பாவை இப்படிக் கூப்பிடக் கூடாது. மரியாதையா பேசணும். சரியா.

ரமேஷ் : அப்பா! மரியாதையா இங்க வா.

********************************

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம் தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமா.. மத்த ஓவியங்களைச் சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல.

********************************

அதிகாரி : ஏம்மா ஆபீசுக்கு லேட்டு?

ஸ்டாஃப் : மாடிப் படியில இறங்கும்போது உருண்டு கீழ விழுந்துட்டேன் சார்.

அதிகாரி : அப்ப சீக்கிரம் வந்திருக்கணுமே..

********************************

கரப்பான் பூச்சியை கொல்ல அந்துருண்டை வாங்கினியே.. என்னாச்சு?

அந்துருண்டையால குறி பாத்து அடிச்சுப் பாத்தேன். கரப்பான் பூச்சி பறந்து போயிடுச்சு.

********************************

சார் : வேலு.. ஏண்டா லேட்டா வர்ற?

வேலு : என் காசை தொலைச்சுட்டு தேடினேன் சார். அதுனால லேட்டாய்டுச்சு.

சார் : சரி.. பாலு நீ ஏண்டா லேட்டு?

பாலு அந்தக் காசை என் காலடியில் மறைச்சு வச்சுகிட்டு இருந்தேன் சார். நகர முடியல. அதனால தான் லேட்டாய்டுச்சு.

********************************

நீங்க எவ்வளவோ ஜோக்ஸ் சொல்றீங்க.. ஆனா ஜோக்ஸ் எதுவுமே சிரிக்கிற மாதிரி இல்லையே..

ஜோக்ஸ் எப்படி சார் சிரிக்கும்?? நாம தான் சிரிக்கணும்.

********************************



--
Regards,
Yoganandhan Ganesan





Indian Flag
Funmails Official Blog

Invite Friends  Email Subscribe  Web Subscribe  Visit Website

Join Iruvar ullam Group   Visit Our Website

Iruvar Ullam

Iruvar Ullam

   My Blog Site Lists

 


__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: