PASS THIS TO EVERYONE YOU KNOW 290+ Members Already Joined JOIN IRUVAR ULLAM GROUP TO RECEIVE COOL & IRUVAR ULLAM MAILS
If you can't see the pictures, right click and choose "show picture" you may have to repeat this several times. Todays Email [25.04.2011]

வலிப்பு நோய் என்றால் என்ன?

மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.
*
வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?
யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். *
இந்த நோய் அறிகுறிகள் யாவை?
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.
கை, கால் இழுத்தல் வாயில் நுரை தள்ளுதல்
சுய நினைவு மாறுதல்
உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)
கண் மேலே சொருகுதல்
சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்
திடிரென மயாக்கமடைந்து விழுதல்
கண் சிமிட்டல் நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)
மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோய்ன் அறிகுறிகள்.
*
வலிப்பு நோய் எதனால் வருகிறது?
மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)
மூளையில் காச நோய் (Tuberculoma)
தலைக் காயம் (Head Injury)
குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)
மூளை காய்ச்சல் (Brain Fever)
மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது
மூளையில் புற்று நோய் (Brain Tumer)
உறக்கமின்னை
போதைப் பொருள் உபயோகித்தல்
மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்
*
இது பரம்பரை வியாதியா? பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.
*
இந்த நோய் எந்த வயதில் வரும்? இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.
*
இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் யாவை? முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,
EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.
CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல். MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?
அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் அறிந்து மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.
*
எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ள வேண்டும்?
இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடுகிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவையான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறைத்து அதன் பின் நிறுத்த வேண்டும்.
*
இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து அவா¢ன் அலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ளவும். *
இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் ·போலிக் ஆசிட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தா¢க்கும் முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.
*
இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?
வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.
**
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.
பள்ளி, கல்லு¡¢ மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம். விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.
திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம்
உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும். நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.
**
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.
நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளில் நீராடுவது. இவ்வகையினருக்கு இது ஆபத்தான ஒன்று. தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.
நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.
அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது. *
முறையான சிகிச்சை செய்ய வில்லை என்றால்?
ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
-- Regards, Yoganandhan Ganesan 09731314641



 | |
0 comments:
Post a Comment