தமிழகத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலளார் செல்வி. ஜெயலலிதாவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாலையே, தனது தந்தையார் இயக்குனர் சந்திரசேகரனுடன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிர்ச்சி வெற்றியீட்டி, எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமரவுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்தை, நேற்று மாலை நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது, இவருடன் இயக்குனர் அமீர், இயக்குனர் சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டதன் பின்னர், இவர்களோடு விஜய்காந் சிறிது நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிய வருகிறது. நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டதாக அறியப்படுகிறது.
$VijayDinesh$
-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen
ThalaPathY AaGatuM<-
|
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment