நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம்.
விஜய்யின் முந்தைய படமான காவலன் படத்திற்கு எக்கச்சக்க தொந்தரவுகளை கொடுத்தது.
படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத்தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றியும் பெற்றது.

அதனைத் தொடர்ந்து வேலாயுதம் பட சூட்டிங்கில் விஜய் பங்கேற்று வந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ரசிகர் மன்றம் பகிரங்க ஆதரவு தெரிவித்தது.

விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ரசிகர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முன்னணி நிலவரம் வெளியாக ஆரம்பித்ததில் இருந்தே ஜெயா டிவியில் விஜய்யின் வேலாயுதம் படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டன.

இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம் என்ற விளம்பர வரிகளுடன் வெளியான அந்த விளம்பரம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. ‌வேலாயுதம் படத்தினை வாங்க பலரும் முயற்சி‌ செய்துவந்த நிலையில் அந்த படம் ஜெயா டிவிக்கு கைமாறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்தார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். ஆனால் விஜய் நேரடியாக பிரசாரத்துக்கு வரவில்லை. ஜெயா டிவிக்கு தேர்தல் நேரத்தில் வாய்ஸ் தர சம்மதித்த விஜய் கடைசி நேரத்தில் அப்பாவின் அட்வைஸ்படி பின்வாங்கினாராம்.

இதனால் ஜெயலலிதாவுக்கு வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு வேலாயுதம் இசைவெளியீட்டுக்கு வர சம்மதித்துவிட்டாராம். இதனால் ஜூன் 9-ஆம் தேதி வேலாயுதம் இசை வெளியீட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைக்கிறது. தற்போது வேலாயுதம் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்கு தர முன்வந்திருக்கிறார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

ஒருவேளை திமுக ஜெயித்திருந்தால் விஜயை கலைஞருடன் சமாதனம் செய்து வைக்கத் திட்டம் போட்டிருந்தாராம் அவர். இப்போது அதற்கு வேலையில்லாமல் போய்விட்டது.

ஒருவாரத்துக்கு முன்பே மூன்றுவிதமான டிரைலர்களை ரெடி செய்து வைத்திருந்த எஸ்.ஏ.சி, நேற்றுகாலை அதிமுக முன்னணி என்று தெரிந்ததுமே ஜெயா டிவியில் உடனடியாக டெலிகாஸ்ட் செய்யும்படி சிக்னல் கொடுத்தாராம். இந்த டிரைலர்களை தொடர்ந்து இசைவெளியீடு வரை ஒளிபரப்ப மூன்று வாரங்களுக்கு 15 லட்சம் பேக்கேஜாக பேசி ஒரே பேமண்டாக நேற்றே கொடுத்து அதிரடி செய்தார்களாம்.


 

$VijayDinesh$

 

-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen

 

     ThalaPathY AaGatuM<-

 

 

 

 


 

 



 



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: