Velayudham is full and full family entertainer, movie is awesome, fans going to fly high compared to 7am Arivu, which has more content and not for tamil audience, it didnt met the expectation created, so Velayudham is the winner for sure this Diwali. Vikatan Review - வேலாயுதம் தீபாவளி சரவெடிகளில் தான் ஒரு கில்லி என்று விஜய் மறுபடியும் நிரூபித்துவிட்டா�� �். ஏற்கனவே பார்த்த கதை போல இருந்தாலும் சின்ன சின்ன திருப்பங்கள் காட்டி சிலிர்க்க வைக்கிறார்கள் ராஜாவும்-சுபாவும். வசனங்கள் எழுதிய சுபாவிற்கு இப்போதே ஒரு போக்கே கொடுத்து விடலாம். அப்பாவி கிராமத்து பால்காரன் - பாசமுள்ள அண்ணன் - ஊருக்கு கட்டுப்படும் வாலிபன் என்கிற நிலையில் இருந்து ஒரு மிகப்பெரிய ஆபத்பாந்தவன் என்று அசுர அவதாரம் எடுத்து ஆச்சர்யப்பட வைக்கிறார் விஜய். மூளைசலவை செய்து நல்ல விஷயங்கள் செய்ய வைக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல அத்தாட்சி. விஜய் தயங்கி தயங்கி விலக, ஜெனீலியா அவரை ஏன் தொடர வேண்டும் என்கிற ஒரு சின்ன லாஜிக் கேள்வி வராமல் இல்லை. ஹன்சிகாவிற்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. மாமனை பார்த்து மயங்கி, உருகி பாட்டு பாடுகிறார�� பின்பு தியாகமும் செய்கிறார். தங்கையாக வரும் சரண்யா அசத்தல். அண்ணன்-தங்கையாக விஜய்-சரண்யாவை பார்ப்பதற்கு கொள்ளை அழகு. காமெடி என்று தனியாக வைக்காமல் படம் நெடுக கதையுடனே பயணம் செய்கிறது. வில்லன்கள் எல்லாரும் கடனே என்று வில்லத்தனம் செய்கிறார்கள். அவ்வளவு தான். இந்த படம் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு மைல்கல். துருதுரு என்று நடித்து படத்தை விறுவிறுப்பாக வைத்துக்கொள்கிறார். பாடல்கள் பரவாயில்லை, பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கவனத்துடன் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு விறு விறு கதைக்கு இந்த இசை போதாது விஜய் ஆண்டனி சார். ரஜினிக்கு பாட்ஷா போல, விஜய்க்கு ஒரு வேலாயுதம். |
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment