7 ஆம் அறிவு படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், பிரியா ஆனந்த், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படத்திற்கு "துப்பாக்கி" என்ற பெயர் வைத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.

படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

- Ayngaran International



__._,_.___
Recent Activity:
MARKETPLACE

Stay on top of your group activity without leaving the page you're on - Get the Yahoo! Toolbar now.

.

__,_._,___

0 comments: