" Your Not a Memebr Join us ! .? Please visit and join Click Here !
Iruvar Ullam


காய்கள், கனிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே.  இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன.  மனிதர்களின் அன்றாட உணவுத் தேவைகளில் காய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  கொழுப்புச் சத்து குறைந்த வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் நிறைந்தவைதான் காய்கறிகள்.  இவைகளை சமைத்து உண்பதால் உடலுக்கு வலு கிடைக்கும்.  இவை எளிதில் ஜீரணமாகும்.  மலச்சிக்கலைப் போக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

இந்த இதழில் அனைவருக்கும்  பரிச்சயமான வெண்டைக் காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வெண்டையை ஏழைகளின் நண்பன் என்று கூட சொல்லலாம்.    சைவ உணவு உண்பவர்கள் அதிகம் சேர்க்கும் காயாகும்.  எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கலாம்.

இது இந்தியாவின் வெப்பமான பாகங்களில் பயிராகும்.  சிறு செடியாக காணப்படும்.  இதன் காய் சமையலுக்கு பயன்படுகிறது.  இலை, விதை, மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.

கண்ட கிராண வடிய அதிசாரம்
விண்ட வெண் சீதரத்தம் மேஷங்காண்- ஓண்டொடியே
வண்டற்காம் வெய்யகப வாதமிகும் வாய்க் குணவாம்
வெண்டைக்காய் உண்பார்க்கு விள்
(அகத்தியர் குணபாடம்)

பொருள் - இதன் காயால், நாள்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் போகும்.  நல்ல சுவையைக்  கொடுக்கும்.

ஞாபக சக்தி

மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும்.  ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது.  ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.  இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது.  அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்தம் சுத்தமடைய

இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது.  இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது.   இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது.  சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது.  வயிற்றுக் கடுப்புடன் இரத்தம் வெளியேறுவதை தடுக்குகிறது.

மலச்சிக்கலைப் போக்கும்

மலச்சிக்கல் தான் நோய்க்கு மூலகாரணம்.  மலச்சிக்கலைப் போக்க வெண்டைக்காய் சிறந்த மருந்தாகும்.  இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும்.



வயிற்றுப்புண் ஆற

வயிற்றில் உண்டான புண்கள் ஆற வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதனால் வயிற்றுப் புண் எளிதில் குணமாகும்.  அசீரணக் கோளாறு நீங்கி நன்கு பசியைத் தூண்டும்.

சரும பாதிப்பு நீங்க

புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் சருமத்திற்கு வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால்  சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து பாதிப்புகளை நீக்குகிறது.

குழந்தை நன்கு வளர

தினமும் பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.  இது குழந்தைகளை அறிவு ஜீவியாக எதிர்காலத்தில் மாற்றும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

அதிக சர்க்கரை உடம்பில் கூடிவிட்டால் வெண்டைக் காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி  இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில்  நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் அப்படியே குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.  தேவைப்படும்போது இதை பயன்படுத்தலாம்.

உடல் வலுப்பெற

உடல் சோர்வு, மனச்சோர்வு இருந்தால் மனிதன் நிரந்தர நோயாளிதான்.  இதைப் போக்க வெண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.

நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து அருந்தி வந்தால் உடல் வலு கிடைக்கும்.  மயக்கம் தலைசுற்றல் நீங்கும்.

சமைத்து உண்பதற்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது.

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

சக்தி - 31 கலோரி

கார்போஹைட்ரேட்    - 7.03 கிராம்
சர்க்கரை        - 1.20 கிராம்
ஈடிஞுtச்ணூதூ ஞூடிஞஞுணூ        - 3.2 கிராம்
கொழுப்பு        - 0.10 கிராம்
புரதம்        - 2.00 கிராம்
நீர்ச்சத்து        - 90.17 கிராம்



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 




 

__._,_.___
Recent Activity:
Hi Friends,

Ungalaukum ithu pola mail pannanum asaiya iruka, appo kizha irukara link click pannuga, Join pannuga.. :D

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/

Appram enna, Forward pannuga, Santhosa paduravanga santhosa padatum, thituravanga thitatum. Group la ithu yellam satharanam pa!! :P

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/join

Thanks and Regards,
Iruvar Ullam - Iru Ullathin Thevaigal:)
.

__,_._,___

0 comments: