Monday, November 29, 2010

[OnlyVijayFans] rocking news

 

கேரளாவில் நடிகர் விஜய்க்கு சிலை!!
[ Monday, 29 November 2010, 08:55.35 AM GMT +05:30 ]
நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில விஜய் ரசிகர்கள். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான்.

இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின.

விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.

இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைக்கும் அளவுக்குப் போய்விட்டனர்.

இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.

சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்த விஜய், அந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. "கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை," என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பிஆர்ஓவுமான பிடி செல்வகுமார்.



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: