Tuesday, June 14, 2011

[OnlyVijayFans] Vijay @ Kerala

 













கேரளாவில் விஜய்

கேரளாவில் விஜ**ய்-க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மலையாள ஹீரோக்கள் பொறாமைப்படும் அளவுக்கு இந்த எண்ணிக்கை மிக அதிகம்.


ரசிகர்கள் அதிகமிருக்கும் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் விஜ*ய்யின் வேலாயுதம் படத்தின் படப்*பிடிப்பை நடத்தியிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா. இந்தப் படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொண்டார்.

வேலாயுதம் படத்தில் நவீன ராபின்ஸுட்டாக வருகிறார் விஜய். ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா என இரு ஹீரோயின்கள். சரண்யா மோகனும் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசை.

இந்தப் படம் மங்காத்தா வெளியாகும் அதேநாள் திரைக்கு வரும் என சிலர் எழுதி வருகின்றனர். அது சாத்தியமில்லை என்பது திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பு உணர்த்தியுள்ளது. மங்காத்தாவின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் வேலாயுதத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. மேலும் இரு பாடல் காட்சிகள் வேறு படமாக்கப்பட வேண்டும் என பட யூனிட் தெ*ரிவித்துள்ளது.

மங்காத்தாவுக்குப் பிறகே வேலாயுதம் வெளிவரும் என்பதையே இது உணர்த்துகிறது.

Link:- http://tamil.webdunia.com/entertainm...10613025_1.htm



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: