ミ★» ѕтαя νιנαソ «★彡™
Posted: 16 Jun 2011 05:51 AM PDTதொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்த விஜய்யின் "வேலாயுதம்" படத்தின் ஆடியோ ரிலீஸ் அடுத்த மாதம் ஜூலை 5ம் தேதி ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. "காவலன்" படத்திற்கு பிறகு விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் "வேலாயுதம்". அதிரடி ஆக்ஷன் கலந்த மசாலா படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். "ஜெயம்" ராஜா இயக்கும் இப்படத்தை, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் வந்த நிலையில், அடுத்த மாதம் ஜூலை 5ம் தேதி திட்டவட்டமாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். மெலோடி, குத்துப்பாட்டு என்று விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2கோடி செலவில் படமாக்கியுள்ளனர்.
முன்னதாக வேலாயுதம் படத்தின் ஆடியோவை முதல்வர் ஜெயலலிதாவை வைத்து நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய்யும், அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் இதனை ஜெயலலிதா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Ayngaran Internationals Posted: 16 Jun 2011 05:27 AM PDT
You are subscribed to email updates from ミ★» ѕтαя νιנαソ «★彡™
To stop receiving these emails, you may unsubscribe now.Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment