1. "ஒரே  வீட்ல  பன்றிக்  குட்டிகளுடன்  10  நாள்  தங்கி  இருக்கணுமா? என்னால  முடியாது!"
 
 "மேடம்  விளையாடாதீங்க!  இது  'PIG'Brothers'  நிகழ்ச்சினு  முதல்லயே  சொன்னோமே?"
 
 
 
 2. "ஐ.சி.யு.ல  வைக்கற  அளவு  பேஷண்ட்டுக்கு  என்ன  பிரச்சணை?"
 
 "பேஷண்ட்டுக்கு  எந்தப்  பிரச்சனையும்  இல்ல,  டாக்டருக்குத்தான்  கொஞ்சம்  பணப்  பிரச்சனை."
 
 
 
 3. "தீவிரவாதிகளைப்  பிடிக்கறதுல  போலீஸ்  ரொம்ப  உஷாரா  இருக்கு"
 
 "எப்படி  சொல்றே?"
 
 "குண்டு  மிளகாய்  பர்ச்சேஸ்  பண்ணுனாக்கூட  அரெஸ்ட்  பண்ணிடறாங்களே?"
 
 
 
 4. "வன்முறை  என்றாலே  நம்  மன்னருக்கு  பிடிக்காது"
 
 "அதற்காக  வானில்  மின்னல்  வெட்டினால்  கூட  இப்படி  பயப்படுவதா?"
 
 
 
 5. "டாக்டர்,  20  வருஷமா  டெய்லி  ஊசி  போடறீங்க!  அதுக்குப்  பதிலா  ஒரு  ஆபரேஷன்  பண்ணி  குணப்படுத்தக்  கூடாதா?"
 
 "பொன்  முட்டை  இடற  வாத்தை  ஒரே  நாள்ல  அழிக்க  சொல்றீங்களா!"
 
 
 
 6. "இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்கு  பிறகு  சாப்பிடணும்."
 
 "ஓ.கே.  டாக்டர். சாப்பாடு  எங்கே  எப்போ போடுவீங்க?"
 
 
 
 7. "டாக்டர்,  இதுவரைக்கும்  ஏதாவது  நல்ல  காரியம்  பண்ணியிருக்கீங்களா?"
 
 "ஏகப்பட்ட  காரியம்  பண்ணியிருக்கேன்.  நல்லதா,  கெட்டதான்னுதான்  தெரியலை!"
 
 
 
 8. "டாகடர்  எதுக்கு  நர்ஸ்  சித்ராவை  வட்டம்  அடிச்சிட்டு  இருக்காரு?"
 
 "டெய்லி  காலையில  டாக்டர்  ரவுண்ட்ஸ்  வருவார்னு  சொன்னேனே!"
 
 
 
 
 9. "டாகடர்,  என்  கணவர்  அடிக்கடி  சிரிச்சிட்டு  இருக்காரு!"
 
 "ஓஹோ...  அவரு  சந்தோஷமா  இருக்கறது  கூட  உங்களுக்கு  பிடிக்கலையா?"
 
 
 
 10. "டைரக்டர்  சார்,  ஆபரேஷன்  தியேட்டரை  காட்டிட்டு  அப்புறம்  சுவர்க்கடிகார  பெண்டுலத்தை  காண்பிக்கறீங்களே,  என்ன  அர்த்தம்?"
 
 "உயிர்  ஊசலாடிட்டு  இருக்குன்னு  அர்த்தம்."
 
 
 
 11. "டாக்டர்,  எனக்கு  வந்திருக்கறது  ஒற்றை  தலைவலின்னு  எப்படிச்  சொல்றீங்க?"
 
 "ஹெட்  ஏக்னு  ( HEADACHE) சொன்னீங்களே?  'ஏக்'னா  ஹிந்தில  ஒண்ணுதானே?"
 
 
 
 12. "இன்கம்டாக்ஸ்  எந்தெந்த  வழியில  கட்டலாம்னு  கவர்மெண்ட்  டெய்லி  டி.வி-ல  விளம்பரம்  தருதே?"
 
 "இன்கம்-க்கு  ஏதாவது  வழி  சொன்னா  தேவலை"
 
 
 
 13. "நீ  கோபமா  இருக்கறப்ப  உன்  2  கன்னமும்  சிவந்துடுதுன்னு  என்  மனைவி  கிட்டே  சொன்னது  தப்பா  போச்சு"
 
 "ஏன்?"
 
 "24  மணி  நேரமும்  அவ  கன்னம்  சிவந்தே  இருக்கு."
 
 
 
 14. "ஸ்கூட்டர்  ஓட்டற  மாப்ளை  வேணாம்.  பைக்  வெச்சிருக்கற  மாப்ளைதான்  வேணும்னு  ஏம்மா  சொல்றே?"
 
 "ஸ்கூட்டர்  மாப்ளைன்னா  அவருக்கு  ஸ்டெப்னி  வெச்சிருக்கற  பழக்கம்   இருக்குமேப்பா?"
 
 
 
 15. "நிருபர்:  உங்க  வெய்ட்  எவ்வளவு?"
 
 "நடிகை:  மேக்-அப்புக்கு  முன்னாலயா?  மேக்-அப்புக்கு  பின்னாலயா?"
 
 
 
 16. "தலைவர்  தான்  கட்சி  வேட்டி  கட்டியிருக்கறப்ப  மட்டும்  வேட்டியை   மடிச்சுக்  கட்றதுக்குக்  கூட  ஒரு  ஆள்  வெச்சிருக்காரே.  ஏன்?"
 
 "கறை   படியாத  கரத்துக்கு சொந்தக்காரர்ன்னு  பெயர்  எடுக்கணுமாம்."
-- 
அன்புடன், 
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
   
 
0 comments:
Post a Comment