விதிமுறைகள்.
---------------
1. உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.
2. சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும்
நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.
3. ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது
4. சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல்
பண்ண கூடாது.
5. அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை
புண்படுத்தக்கூடாது.
6. சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத்
தவிருங்கள்.
7. பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.
8. அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.
9. கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.
சுருங்கக்கூறின்
* மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
* அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
* காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
* சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
* திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில்
தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.
எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.
பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.
1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை
செய்யப்பட்டுள்ளது.
புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.
0 comments:
Post a Comment