விஜய் நடிப்பில் மிகந்த பொருட்செலவில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கி இருக்கிறார். இசை வெளீயிடு, படம் வெளீயிடு குறித்து படக்குழுவினிரிடம் விசாரித்ததில், படக்குழுவினர் அளித்த தகவல் : படப்பிடிப்பு 90% சதவீதம் வரை முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் பாக்கியுள்ளது. விஜய் - ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடலை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறோம். விஜய் - ஜெனிலியா சம்பந்தப்பட்ட பாடல் செட் போட்டு படமாக்க இருக்கிறோம். விஜய் இப்படத்தில் நிறைய காட்சிகளில் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். படத்தில் இசை வெளியீடு இம்மாதம் நடைபெறும். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடித்த தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டில் ஜாக்கிசான் கலந்து கொண்டார். அதைப் போலவே இப்படத்தின் இசை வெளீயிட்டை மிகப் பிரம்மாண்டமாக நடித்த திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். விஜய் தற்போது அ.தி.மு.கவிற்கு ஆதரவு அளித்து வருவதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. விஜய் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு விஜய் ஆண்டனி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற விஜய்யின் மாஸ் படங்களின் வரிசையில் வேலாயுதம் படமும் இடம் பெறும்.
$VijayDinesh$
-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen
ThalaPathY AaGatuM<-
|
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment