__,_._,___
இளையதளபதி விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்தில் மூன்று பாடல்களை கவிஞர் அண்ணாமலை எழுதியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ஓடியோவில் குறிப்பாக 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறார்கள். "வேட்டைக்காரன்" படத்துக்காக 'என் உச்சி மண்டையில..' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. அதன் பிறகு, "வேலாயுதம்" படத்துக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் முக்கியமானது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் ராஜா இருவரும் எனக்கு இந்த வாய்ப்பை தந்தார்கள். இதில் நான் எழுதிய மூன்று பாடல்களும் வெற்றி பெறும், குறிப்பாக "ரத்தத்தின் ரத்தமே.." பாடல் விஜய் சாருக்கு மிகவும் பிடித்த பாடலாக உள்ளது. நாகப்பட்டினம் பொதுகூட்டத்தில் அவரே நான் நடித்த 51 படங்களில் எனக்கு இப்படி ஒரு பாடல் அமையவில்லை என்று இந்த பாடலை சொல்லி ரசிகர்களுக்காக மேடையில் அந்த பாடலை பாடிக்காட்டினார். படத்தில் இந்த பாடல் விஜய் தன் தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை சொல்கிற பாடலாக வருகிறது. ஆனால்,அதையும் தாண்டி எல்லா விஜய் ரசிகர்களுக்கான பாடலாக அமைந்து விட்டது. காதல், குத்து என்கிற வழக்கமான வட்டத்துக்குள் அடைப்பட்டு விடாமல் ஒரு மனிதன் பிறர் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை பேசும் பாடலாக இது வருகிறது. விஜய் ஆண்டனி சார் எந்த பாடல் என்றாலும் அதை ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற துடிப்போடு உழைப்பவர். இந்த பாடலுக்காக மெட்டு போட என்னிடம் கொடுக்கும் போது ஏதாவது புதுமையான ஆரம்ப வரிகள் வேண்டும் என்று கேட்டார். "ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன்பிறப்பே..' என்று வித்தியாசமாக நான் ஆரம்பிக்க அது அவருக்கு மிகவும் பிடித்தது. அடுத்து 'அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்க்கை உனக்காகத்தானே, செத்தாலும் பிழைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா.." என்று அழுத்தமான வரிகள் வந்து விழுந்தன. இரண்டு மணி நேரத்தில் மொத்த பாடலும் முடிந்து விட்டது. பிறகு இயக்குனர் ராஜா சொன்ன சில விடயங்களை பாடலில் சேர்த்தேன். எத்தனை வருடங்கள் கடந்தாலும் எனக்கு கேட்க சலிக்காத ஒரு பாடல் இது. விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் கவிஞர் அண்ணாமலை. "யுவன் யுவதி", "புலிவேசம்", "நாங்க", "பீமன்", "அஸ்தினாபுரம்", "ஊதாரி", "இறைமகன்" உட்பட பதினைந்து படங்களுக்கு பாடல்களை எழுதிவருகிறார்
$VijayDinesh$
-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen
ThalaPathY AaGatuM<-
|
tublog.blogspot.com | Design by JustSkins | Converted by Blog and Web
0 comments:
Post a Comment